சென்னை: இன்று காலை 6 மணி முதல் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டிலும் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகள் என 13 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறைத்துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகரில் உள்ள அவரது வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 13 இடங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.