சென்னை: மக்கள் நலக் கூட்டணி இனி இருக்காது என்பது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டுக்கு மதிமுக பொதுச்செயலரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ அழைக்கப்படாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் டிசம்பர் 28-ந் தேதி “மோடி அரசின் பொருளாதார நெருக்கடி நிலை… அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு” மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது. இதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இடதுசாரி தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் மட்டும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.