சென்னை: எம்ஜிஆர், ஜெ.வுக்கு கிடைத்த தலித் வாக்குகள் அதிமுகவுக்கு தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமே என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.