சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையிரல் நோய் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றால் மூச்சு விட கருணாநிதி சிரமப்படுவதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.