இயேசு பெருமானின் பிறந்தநாள் (திசம்பர் 25) உலகம் முழுவதும் “கிறிஸ்துமஸ் பெருவிழாவாக” கொண்டாடப்படுகிறது. அனைத்துலக நாடுகளிலும் கோடிகணக்கான மக்கள் ‘கேக்’ வெட்டி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்

இந்த இனிய நாளில் கிறிஸ்தவப் பெருங்குடிமக்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மனிதநேயம் என்னும் மாண்பினை இம்மண்ணுலகில் பரப்பியவர். எவர்மீதும் வெறுப்பை உமிழாமல், எல்லோர்மீதும் அன்பைப் பொழிந்தவர். தனக்கு எதிரானவர்கள் மீதும், காட்டிக்கொடுத்தவர்கள் மீதும்
கருணை காட்டியவர். மன்னிப்பது என்னும் மகத்தான பண்பே மானுடத்தின் உயர்ந்த நாகரிகம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்.அத்தகைய பெருமான் இயேசுவைப் போற்றும் இந்த நன்னாளில், அவர் போதித்த மாண்புகளைப் பின்பற்றிச் சமூக நல்லிணக்கத்தைப் பேண நாம் யாவரும் உறுதியேற்போம்.
இவண்
தொல்.திருமாவளவன்