காலச்சுவடு

சனவரி 21,2015 விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துவங்கி
வெள்ளிவிழா ஆண்டு -விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனர் ,தலைவர் தொல் .திருமாவளவன்
அவர்களின் வரலாற்று குறிப்புகள்

...............................................................................................................

பெயர் :தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17,1962)
தந்தை :தொல்காப்பியர்
தாய் :பெரியம்மா
பிறந்த ஊர் :அரியலூர் மாவட்டம் அங்கனூர்

கல்வி:

புகுமுக வகுப்பு ‍(பியு.சி) (1978-79) அருள்மிகு கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரி,
விருத்தாசலம். பட்ட வகுப்பு -‍‍‍ இளம்வேதியல்(பி.எஸ்.சி) (1979‍-82) மாநிலக் கல்லூரி,
சென்னை. பட்ட மேற் வகுப்பு முதுகலை குற்றவியல்(எம்‍.ஏ) (1983- 85) சென்னை பல்கலைக்
கழகம், சென்னை

சட்ட வகுப்பு இளநிலைச் சட்டம்(பி.எல்) (1985 -88) சென்னை சட்டக் கல்லூரி, சென்னை.
அரசுப்பணி :

தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், அறிவியல் உதவியாளராக 5.4.1988 இல் மதுரையில்
பணியமர்த்தம் மதுரை, கோவை,சென்னை ஆகிய இடங்களில் பணி செய்தல். 1999 நாடாளுமன்ற பொதுத்
தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 17.08.1999 இல் பணி விலகல்.
பொதுவாழ்க்கை:
1983:

*ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று
நடத்தியது.

*தலித் மாணவர் போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் இயக்கங்களின் போராட்டங்களில் பங்கேற்பு-
கைது

1984:

*கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பு.

* பேரவையின் சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை 4.3.1984

அன்று சென்னை பெரியார் திடலில் தலைமையேற்று நடத்தியது.

*ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலி எனும் கையெழுத்து ஏட்டை ஆசிரியராகப்
பொறுப்பேற்று நடத்தியது.

1985:

*சென்னை கடலோரப் பகுதிகளைச்சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள்,மாணவர்களை
ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இளைஞர் நல இயக்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று
வழிநடத்தியது.

* அவ்வியக்கத்தின் சார்பில் ஈழ விடுதலைக்குஆதரவாக மிதிவண்டிப்
பேரணி,ஆர்பாட்டங்கள்,கருத்தரங்கங்கள் நடத்தியது.

1986:

*ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக்கண்டித்து
அனைத்துக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களையும்
,ஆர்பாட்டங்களையும் நடத்தியது.

* புதிய கல்விக்கொள்ளை (நவோதயா)திட்டத்தின் நகலை எரித்து சென்னை சட்டக்கல்லூரி முன்
கைதானது.

*திராவிடர் களங்கம் நடத்திய ஈழதமிழர்களுக்கு ஆதரவாக ரயில் மறியல்போராட்டத்தில்
பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் கைதானது.

* இந்தி எழுத்து அழிப்புப்போராட்டத்தில் பங்கெடுத்தது.

1987:

*ஈழத்தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப்போராட்டத்தை
பாரிமுனைப்பகுதியில் தலைமையேற்று நடத்தியது.

1988:

*பாரதிய தலித்பேந்தர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் அ.மலைச்சாமி அவர்களுடன்
சந்திப்பு.அவ்வியக்க கூட்டங்களில் பங்கேற்பு .

1989:

*செப்டம்பர் 14 அன்று வழக்கறிஞர் அ.மலைச்சாமி காலமானதையொட்டி 31.12.1989 அன்று மதுரை
தமுக்கம் கலையரங்கில் இரங்கள் கூட்டம் நடத்தியது

.

1990:

*ஜனவரி 21 அன்று விடுதலைச்சிறுத்தைகள் (தலித் பேந்தர்) இயக்கத்தின் தலைமைப்
பொறுப்பேற்றது.

1990- 1998

*ஏப்ரல் 14 1990 புரட்சியாளர் பிறந்தநாளில் அன்று இயக்கத்தின் முதல் கொடி மதுரை
கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் ஏற்றி வைத்தார்.

*மாரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைச்சூட்டுவதற்கு
எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா இயக்கத்தைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம்.

*இட ஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு விதித்ததை கண்டித்து விமான மறியல்.

* ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியாட்டம் செய்த சந்திரிகா கொடும்பாவி எரிப்பு.

*சென்னகரம்பட்டி படுகொலை,திட்டக்குடி படுகொலை மற்றும் மேலவளவு படுகொலை உள்ளிட்ட தலித்
மக்களுக்கெதிரான சாதி வெறியாட்டத்தை கண்டித்து பேரணிகள்.ஆர்ப்பாட்டங்கள் போன்ற தீவிரமான
பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

*நக்சல்பாரிகளுடன் தொடர்புபடுத்தி சிவகங்கை மாவட்ட காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டார்.

1999:

*முதல் முறையாக சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மூன்றாவது அணி சார்பில்
போட்டியிட்டு 2.25.768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்தது.

2001:

*சட்டமன்றப்பொதுத்தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக
வெற்றி பெற்றது.

*தென்னாப்பிரிக்காவில் டர்பன் மாநகரில் நடைபெற்ற நிறவெறிக்கெதிரான அனைத்துலக
மாநாட்டில்(WCAR) பங்கேற்பு.

2002:

*யாழ்ப்பாணத்தில் “கலை இலக்கிய கழகம்” மற்றும் திதர்சனம் ஆகிய அமைப்புகளின் சார்பில்
நடைபெற்ற மானுடத்தில் தமிழ்க்கூடல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு.

2003:

*அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கம் ,உலகத்தமிழ் அமைப்புஆகியவை நடத்திய
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப்பங்கேற்பு.

*தமிழ்ப்பெயர் சூட்டும் செயலைப்பாராட்டி உலகத்தமிழ் அமைப்பின் சார்பில்
“செந்தமிழ்க்காவலர்” பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பெற்றது.

*கனடாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் உலகத்தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆகிய
அமைப்புகளின் அழைப்பையேற்று கனடாவில்நடைபெற்ற தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு
அழைப்பாளராகப் பங்கேற்றது.

* அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நடத்தும் இலக்கிய அமைப்பு தாய்மண் வாசகர்
வட்டத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் “எழுச்சித்தமிழர்” பட்டம் வழங்கப்பட்டு
சிறப்பிக்கப்பெற்றது.

2004:

*(3.2.2004) நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு
உரிய அரசியல் மதிப்பு மறுக்கப்பட்டதாக சட்டமன்றஉறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

*நாடாளுமன்றத்தேர்தலில்,ஐக்கிய சனதாதளம்,புதிய தமிழகம்,மக்கள் தமிழ்த்தேசியம் ஆகிய
கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் கூட்டணி அமைத்து சிதம்பரம் தொகுதியில்
போட்டியிட்டது.அத்தேர்தலில் சுமார்2.57.000 வாக்குகளைப்பெற்று இரண்டாம்
இடத்தைத்தக்கவைத்தது.

2006:

*அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கூட்டணியில் தமிழகத்தில் 9இடங்களிலும் புதுச்சேரியில்
2 இடங்களிலும் விடுதலைச்சிறுத்தைகள்போட்டியிட்டு தமிழகத்தில் இரண்டு இடங்களை
(காட்டுமன்னார்கோயில்,மங்களூர்) வென்றெடுத்தது.

* 23.12.2006 அன்று இலண்டனில் அன்டன் பாலசிங்கம் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்று
வீரவணக்கம் செலுத்தினார்.

2007 -2008:

*ஈழத்தமிழர் ஆதரவு மனித நேயப்பேரணி,கருத்துரிமை மீட்பு மாநாடு,உள்ளிட்ட கட்சியின்
எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்.

2009:

*ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறிப்போரை நிறுத்தக்கோரி இந்திய அரசை வலியுறுத்தி
2009 சனவரி 16 முதல் 19 வரை மறைமலை நகரில் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டார்.

*ஈழத்தமிழர்களுக்குப்பாதுகாப்புக்கோரியும்போர் நிறுத்தம் வலியுறுத்தியும் இலங்கைத்
தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து தொடர்ப்போராட்டங்களில் பங்கேற்றார்.

*சிதம்பரம் நாடாளுமன்றத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக நட்சத்திரம் சின்னத்தில்
போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

*2.6.2009 அன்றுநாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

*8.6.2009 அன்று நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சை நிகழ்த்தினார்.

*18.7.2009 தி அகடமி ஆப் எக்யூமெனிக்கல் இந்தியன் தியாலஜி&சர்ச் அட்மினிஸ்ட்ரேஷன்
சார்பில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

* ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று
ஈழத்தமிழர்கள் குறித்தும் தலித் மக்கள் குறித்தும் உரையாற்றினார்.

* ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும் அங்குள்ள நிலைமைகளை ஆய்வதற்கும்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில்ஒருவராக இடம்பெற்று ஈழம்சென்று மேனிக் பார்ம்
எனும் முள்வேலி முகாமில் மக்களைச் சந்தித்தார்.

* ஜெர்மனியில் ரெய்ன் என்னும் இடத்தில் புங்குடு தீவு ஒன்றியத்தில் சார்பில்நடைபெற்ற
ஈழத்தமிழர் மாநாட்டில் பங்கு பெற்றார்.அந்நிகழ்வில்நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதம
பொறுப்பாளர் உருத்திரகுமார்,தந்தை இமானுவேல் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.அத்துடன்இலண்டனில் நடைபெற்ற புங்குடு தீவு ஒன்றியத்தின் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு உரையாற்றினார்.

2010:

*மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகர் அவர்களின் மறைவையொட்டி ஈழம் சென்று
அஞ்சலி செலுத்தினார்.

11.1.2010 அன்று ஈழம் சென்று மேதகு பிரபாகரனின் தந்தை வெலுபிள்ளைஅவர்களின் இறுதி
நிகழ்வில் பங்கேற்றார்.

21.2.2010 அன்று மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள்

அவர்களின் மறைவையொட்டி கொழும்பு சென்ற அவர் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி
அனுப்பப்பட்டார்.

15.7.2010 தலைவர் திருமாவளவன் அவர்களின் தந்தை அய்யா.தொல்காப்பியர் காலமானார்.

2011 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி
அமைத்தார்.விடுதலைச்சிறுத்தைகள் தமிழகத்தில் 10 இடங்களிலும்

புதுவையில் 2 இடங்களிலும் போட்டியிட்டது.ஆனால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை
இழந்தது.

2012:

*அக்டோபர் 4,5 ஆகிய நாட்களில் காவிரி நீர் உரிமை ஊர்தி பயணம் மேற்கொண்டார்.இப்பயணம்
சிதம்பரத்திலிருந்து
சீர்காழி,காரைக்கால்,நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,அறந்தாங்கி வழியாக திருச்சி
சென்றடைந்தார்.

11.5.12 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு
பாடத்திட்டத்தில் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில்
பேசினார்.மத்திய கல்வி அமைச்சர்கபில்சிபில் அவர்கள் மன்னிப்பு கோர வற்புறுத்தினார்
அக்கார்ட்டூன் உடனடியாக நீக்கப்பட்டது.

*ஆகத்து 17 அன்று போராளித் தலைவரின் பொன்விழா ஆண்டாக கொண்டாடப்பட்டது.

*எழுச்சித்தமிழர் அவர்கள் டெசோ அமைப்பில் உறுப்பினராக இணைந்தார்.டெசோ சார்பில் நடைபெற்ற
பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.

7.4.2012 பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு
உறுப்பினர் என்கிற முறையில் ஆட்சி நிர்வாகத்தில் கணினி மயம் தொடர்பாக
எஸ்தோனியாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

2013:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில்இந்திய பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி
தோழர் தியாகுடன் ஒரு நாள் உண்ணாநிலை அறபோராட்டம் மேற்கொண்டார்.

சாதிவெறியர்களை கண்டித்து பல்வேறு போராட்டங்கள்

ஏப்ரல்14 மக்கள் ஒற்றுமை பேரணி & மக்கள் ஒற்றுமை மாநாடு

 ஆகத்து 31 பொன்விழா நிறைவு மாநாடு

தெலுங்கானா மாநிலத்தில் தலைவர் அவர்களுக்கு அம்பேத்கர் விருது.

2014:

ஆகத்து 17 ,சேலத்தில் கல்வி உரிமை மாநாடு

நவம்பர் 26,27 கனடாவில் நடைபெற்ற மேதகு தலைவர் பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் விழா
,மாவீரர் நாள் விழாவில் பங்கேற்ற தலைவருக்கு ஈழமுரசு பத்திரிக்கை சார்பில்
விடுதலைப்பெரொளி பட்டம் வழங்கப்பட்டது .

2015:

குவேத் தமிழ் இசுலாமியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஐம்பெரும் விழாவில் சிறப்பு
அழைப்பாளராக பங்கேற்ற தலைவருக்கு "நல்லிணக்க நட்சத்திரம்"விருது வழங்கி பாராட்டு .